மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்? ஓய்வுக்குப் பிறகும் 8-வது ஊதியக் குழு பலன் கிடைக்குமா?

8-வது ஊதியக் குழு குறித்த எதிர்பார்ப்பு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, புதிய ஊதியக் குழு அமலுக்கு வருவதற்கு முன்பே ஓய்வு பெறுபவர்களுக்கு சம்பள உயர்வு, பென்ஷன் திருத்தம் மற்றும் அரியர்ஸ் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

8-வது ஊதியக் குழு ஜனவரி 1, 2026 முதல் அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டாலும், இதற்கான அதிகாரப்பூர்வ தேதியை மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை.

உதாரணமாக, ஒருவர் 2027-ல் ஓய்வு பெறுகிறார் என வைத்துக்கொண்டால், புதிய ஊதியக் கட்டமைப்பு ஜனவரி 1, 2026 முதல் அமல்படுத்தப்பட்டால், அந்தத் தேதியிலிருந்து ஓய்வு பெறும் நாள் வரை திருத்தப்பட்ட சம்பளத்திற்கான நிலுவைத் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது.

ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கும் பென்ஷன் உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. அரசு புதிய பென்ஷன் கட்டமைப்பை அவர்களுக்கும் விரிவுபடுத்தினால், மாத ஓய்வூதியம் அதிகரிப்பதுடன் நிலுவைத் தொகையும் கிடைக்கலாம்.

அரியர்ஸ் கணக்கீடு ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பள வித்தியாசத்தின் அடிப்படையிலும், ஓய்வூதியதாரர்களுக்கு பழைய மற்றும் புதிய பென்ஷன் வித்தியாசத்தின் அடிப்படையிலும் அமையும்.

நவம்பர் 3, 2025 அன்று அமைக்கப்பட்ட 8-வது ஊதியக் குழு, 18 மாதங்களுக்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். எனவே, மே 2027-க்குள் பரிந்துரைகள் வெளியாகலாம்.

மொத்தத்தில், ஓய்வு பெற்றவர்களுக்கு பென்ஷன் உயர்வு மற்றும் அரியர்ஸ் கிடைப்பது தொடர்பான இறுதி முடிவு மத்திய அரசின் அறிவிப்பு மற்றும் விதிகளைப் பொறுத்தே அமையும்.

Related News

Latest News