இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியானது. இப்படத்தில் த்ரிஷா, சிம்ரன், பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
குட் பேட் அக்லி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை நெட்பிளிக்ஸ் தளம் அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மே 8ஆம் தேதி ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது.