Saturday, April 19, 2025

“எல்லாம் முறைப்படிதான் செய்திருக்கிறோம்” – இளையராஜாவுக்கு ‘குட் பேட் அக்லி’ படக்குழு விளக்கம்

இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியானது. இப்படத்தில் த்ரிஷா, சிம்ரன், பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படம் வெளியான முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் செய்து வருகிறது. இப்படத்தில் “இளமை இதோ இதோ” உள்ளிட்ட இளையராஜா இசை அமைத்த பல்வேறு பாடல்கள் பயன்படுத்தபட்டுள்ளது.

இதையடுத்து தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா ரூ.5 கோடி கேட்டு படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு குட் பேட் அக்லி படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

“குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தப்பட்ட பாடல்களுக்கு சம்பந்தப்பட்ட இசை கம்பெனிகளிடம் முறையே அனுமதி பெற்ற பிறகே பயன்படுத்தினோம். அந்த இசை நிறுவனங்களிடம் தான் காப்புரிமை இருக்கிறது. அதனால் அவர்களை தொடர்பு கொண்டு தடையில்லா சான்று பெற்றோம். எல்லாம் முறைப்படியே செய்திருக்கிறோம்” என்று தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தெரிவித்துள்ளது.

Latest news