தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை : இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னையில் தங்கம் விலை வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.72,080-க்கு விற்பனையானது. நேற்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 9,020-க்கும் ஒரு சவரன் ரூ. 72,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,075 க்கும் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,600 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 121 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News