இன்று தங்கத்தின விலை சற்று உயர்வு

கடந்த வாரத்தில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடனே காணப்பட்டது. நேற்று தங்கம் விலை ஒரு கிராம் 9,170 ரூபாய்க்கும், ஒரு சவரன் 73,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,180 ரூபாய்க்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73,440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 126 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News