Thursday, July 3, 2025

3வது நாளாக தொடர்ந்து உயர்ந்த தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,065 க்கும் சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,520 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் 3 வது நாளாக தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,105 க்கும் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,840 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மூன்று நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news