சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,040-க்கும், ஒரு கிராம் ரூ.8,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது.
அதன்படி இன்று 2வது முறையாக தங்கம் விலை சவரனுக்கு ₨1,040 குறைந்து 70,000 ரூபாய்க்கும், ஒரு கிராம் 8,750 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 குறைந்துள்ளது. இது நகை பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.