தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,480 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.8,560 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியில் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.112-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை ரூ.1,12,000-ஆக விற்கப்படுகிறது.

Related News

Latest News