Sunday, August 10, 2025
HTML tutorial

தொடர்ந்து குறையும் தங்கம் விலை! நகை கடைகளுக்கு படையெடுக்கும் மக்கள்! மூன்றாவது நாளாக இன்ப அதிர்ச்சி!

இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைத்துள்ளது. இன்று retail சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் 8895 ரூபாய்க்கும் ஒரு கிராம் 24 கேரட் தங்கம் 9704 ரூபாய்க்கும் 1 கிராம் 18 கேரட் தங்கம் 7325 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

நேற்றும் தங்கம் விலை குறைந்திருந்த நிலையில் இன்று மேலும் சற்று குறைந்திருப்பது மக்களை மகிழ்ச்சியில் மிதக்கவிட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாகவே தங்கம் விலையில் ஏற்பட்ட தொடர் சரிவு தங்க நகை பிரியர்களுக்கு நல்ல Offer என்றே கூறலாம்.

இந்த மே மாதத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் தங்கம் விலை சரிவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. மே 1 முதல் மே 29 வரையிலான நாட்களில் மே 15ம் தேதி தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்து 22 கேரட் தங்கம் ரூ.8,610-க்கு விற்கப்பட்டது. அதே சமயம் ஒரு கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 9513 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இப்படி விலை குறைந்திருந்தாலும் இதற்கு முன்னர் ஏற்பட்ட விலை உயர்வின் போது மக்கள் பெரும் சிக்கலை சந்தித்தனர். இதனால் நகை வாங்குபவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. நகை விலை உயர்வின் போது மக்கள் நகை வாங்கும் போக்கில் மாற்றம் ஏற்படுவதை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். இதனால் கடந்த சில நாட்களை போலவே இன்னமும் கூட தங்கம் விலை குறையும்போது மக்கள் அதை வாங்குவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது ஒரு செய்தி மட்டுமே. இதனை பொதுமக்கள் தங்கத்துக்கான முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்க

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News