Wednesday, December 17, 2025

மறுபடியும் குறைந்த தங்கம் விலை! அப்படியென்றால் 2026-ல் தொடர்ந்து குறையுமா?

இந்தியாவில் சேமிப்பிற்கும் முதலீட்டிற்கும் அடையாளமாகக் கருதப்படும் தங்கத்தின் விலை, தொடர்ச்சியான ஏற்ற இறக்கத்திற்குப் பிறகு மீண்டும் குறைந்து உள்ளது. நவம்பர் 21 அதாவது இன்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.11,460க்கும், ஒரு சவரன் ரூ.320 குறைந்து ரூ.91,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தைத் தாண்டும் அபாய நிலையில் இருந்த சூழலிலிருந்து இது ஒரு முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. நகை ஆர்வலர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இது பெரிய நிம்மதியை அளிக்கிறது.

தீபாவளிக்கு பிறகு தங்கத்தின் விலையில் சரிவு தொடங்கியிருந்தது. இருப்பினும், இடைக்கிடையே சில நாட்கள் விலை ஏற்றமும் பதிவாகி வந்தது. நவம்பர் 19 அன்று ஒரு கிராம் ரூ.11,600, சவரன் ரூ.92,800 என்ற அளவுக்கு விலை உயர்ந்திருந்தது. மறுநாள் மீண்டும் ரூ.100 உயர்வு பதிவானது. ஆனால் தற்போது விலை மீண்டும் தளர்வைச் சந்தித்துள்ளது. தங்கத்துடன் வெள்ளி விலையும் குறைந்து, ஒரு கிராம் ரூ.169க்கு விற்பனை செய்யப்படுகிறது.

முக்கியமான கேள்வி என்னவென்றால் இந்த நிலை 2026-ல் தொடருமா?

தங்கத்தின் விலை உலகளாவிய காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. அமெரிக்க பெடரல் வட்டி விகிதம், உலக பொருளாதார நிலை, போர் அல்லது அரசியல் பதற்றம், டாலர் மதிப்பு, கிரிப்டோ சந்தை போன்றவை விலையை மிகப் பெரிய அளவில் கபளீகரம் செய்கின்றன. 2026ல் இந்தியாவில் தங்கம் தொடர்ந்து குறையும் என உறுதியாக கூற முடியாது. பொருளாதார சுமூக நிலை ஏற்பட்டால் விலை தளரலாம்; ஆனால் சர்வதேச சந்தையில் பதட்டம் அதிகரித்தால் மீண்டும் விலை உயர வாய்ப்பும் உள்ளது.

எனவே, தங்கம் விலை இப்போது குறையும் போக்கு முதலீட்டாளர்களுக்கு நல்ல சூழல் என்றாலும், 2026 ரிலும் இதே நிலை தொடரும் என நிச்சயம் இல்லை. சந்தை நிலவரத்தை கவனித்து திட்டமிடுவதே முதலீட்டாளர்களுக்கும் நகை பிரியர்களுக்கும் பாதுகாப்பானது.

Related News

Latest News