Friday, July 4, 2025

ரூ.67 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை : ஒரே நாளில் அதிரடியாக உயர்வு

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.65,880-க்கும், ஒரு கிராம் ரூ.8,235 விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,720 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,340க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை இன்று ஒரு கிராம் ரூ.3 உயர்ந்து ரூ.114.00க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,14,000-க்கும் விற்பனை ஆகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news