கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் அதிரடியாக உயர்ந்து வருகிறது. தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ. 61,640 க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.7,705 க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. அதன் படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.62,480 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ. 7,810 க்கு விற்பனை செய்யப்படுகிறது.