Friday, March 28, 2025

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது

தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,215-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.65,720-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.

அதன்படி தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,185-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.65,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் 110 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Latest news