Tuesday, May 13, 2025

‘gold loan’ லாம் வேலைக்கே ஆகாது! நகையை வைத்து பணம் பெறும் புதிய வழி – இது உண்மையா?

சீனாவின் ஷாங்காய் நகரில் சமீபத்தில் நிறுவப்பட்ட ஒரு சிறிய இயந்திரம் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இயந்திரம் என்னவென்றால் – தங்க ஏ.டி.எம்!
நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா? ஏ.டி.எம் என்றால் நாம் பொதுவாக பணத்தை எடுக்க பயன்படுத்துவோம். ஆனால் இங்கு தங்கத்தை வைத்து, அதை நேரடியாக பணமாக மாற்றிக்கொள்ளலாம்!
இந்த தங்க ஏ.டி.எம் இயந்திரம் ஷென்சென் நகரத்தில் தலைமையம் கொண்ட கிங்ஹுட் குழுமத்தால்( Kinghood Group.) வடிவமைக்கப்பட்டது. இது தற்போது ஷாங்காய் நகரின் மிக பரபரப்பான வணிக மையங்களில் ஒன்றில் செயல்பட்டு வருகிறது.
இதன் செயல்பாடு மிகவும் எளிதாகவும் புத்திசாலித்தனமாகவும் உள்ளது.
நீங்கள் உங்களிடம் உள்ள தங்க நகையை அல்லது தங்கப் பொருளை இந்த இயந்திரத்தில் வைக்கலாம்.
அதன் பின், அந்த இயந்திரம் தங்கத்தின் தூய்மையை 99.99% சரியாக பரிசோதிக்கிறது
பின்னர் அந்த தங்கத்தின் எடையும், அந்த நேரத்தில் இருக்கும் தங்கத்தின் சந்தை மதிப்பும் கணக்கிடப்பட்டு, ஒரு சிறிய சேவை கட்டணம் கழித்தபின், அந்தத் தொகை நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் அனுப்பப்படுகிறது.
இந்த நடைமுறை வெறும் சில நிமிடங்களில் நடந்து முடிகிறது.
வாடிக்கையாளருக்கு எவ்வித உழைப்பு இல்லாமல், நேர்த்தியான முறையில் தங்கத்தை பணமாக மாற்றும் வசதி இது.

தற்போது தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டிருக்கும் இந்த நிலையில், இத்தகைய தங்க ஏ.டி.எம் வசதிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன.
சமூக ஊடகங்களில் பலரும் இது குறித்து உற்சாகமாக பேசிக்கொண்டும், இந்தியாவிலும் இது விரைவில் வரவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.
அதற்காகவே, இந்தியாவில் ஹைதராபாத் நகரம் தங்க ஏ.டி.எம் வசதியை முதன்மையாக அறிமுகப்படுத்தியுள்ளது. அங்கு மக்கள் தங்கள் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி நேரடியாக தங்கம் வாங்க முடிகிறது. அந்த இயந்திரம் 5 கிலோ தங்கம் வரை சேமிக்கக்கூடிய திறன் கொண்டது.
இவற்றிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் –
தங்கத்தின் மதிப்பு மட்டும் அல்ல, அதை செலுத்தும் முறைமையும் மாறிக்கொண்டே வருகிறது.
இந்த புதிய தொழில்நுட்பம் நம் எதிர்கால வாழ்க்கையை மேலும் சீர்மையானதாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.

Latest news