ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்! விலையில் இன்றும் அதிரடி உயர்வு! 2026 துவக்கத்தில் ஷாக்கிங் மாற்றம்?

சர்வதேச பொருளாதார நிலவரம் மற்றும் டாலர் மதிப்பு மாற்றங்களின் தாக்கத்தால், இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்க விலை புதிய உச்சத்தைத் தொட்டு, முதலீட்டாளர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த நவம்பர் 17-ஆம் தேதி, தங்கம் வரலாறு காணாத உயர்வை எட்டியது. அன்றைய தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.12,200-க்கும், ஒரு சவரன் ரூ.97,600-க்கும் விற்பனையானது. அதற்குப் பிறகு சில நாட்கள் தங்க விலையில் சற்று சரிவு ஏற்பட்டது.

அந்த வகையில், நேற்று தங்க விலை கிராமுக்கு ரூ.100 மற்றும் சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,600, ஒரு சவரன் ரூ.92,800 என விற்பனையாகியது. ஆனால் இன்று காலை சந்தையில் தங்க விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.11,800-ஆகவும், சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.94,400-ஆகவும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் உயர்வைச் சந்தித்துள்ளது — ஒரு கிராம் ரூ.9 உயர்ந்து ரூ.182-க்கும், ஒரு கிலோ ரூ.1,82,000-க்கும் விற்பனையாகி வருகிறது.

பொருளாதார நிபுணர்கள் கூறுவதாவது, உலக சந்தையில் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகளவில் கையிருப்பாக சேர்த்துக் கொண்டிருப்பதும், அமெரிக்க வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்ப்பதும் தங்கத்தின் விலையை மேலும் உயர்த்தும் வாய்ப்புள்ளதாகும்.

இதனால், 2026 தொடக்கத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொடும் சாத்தியம் அதிகம் என மதிப்பிடப்படுகிறது. ஒரு சவரன் ரூ.1 லட்சம் வரை செல்லும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கணிக்கின்றனர்.

Related News

Latest News