உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம், தங்கத்தின் விலையை மேலும் உயர்த்தும் நிலைக்கு கொண்டு வந்து விட்டது. ஏப்ரல் 2ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரிகளை அறிவித்தார். இதனால் பங்குச்சந்தை குலைந்தது. சந்தை நிலைமை குழம்பியதால், முதலீட்டாளர்கள் தங்கத்தை நோக்கி திரும்பினார்கள்.
ஆனால் அதே நேரத்தில், சீனாவைத் தவிர மற்ற நாடுகளுக்கான வரிகளை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்ததால், தங்கத்தின் விலை சில நாட்களுக்கு குறைந்தது. ஏப்ரல் 4 அன்று ஒரு கிராம் தங்கம் ₹8,500க்கு விற்பனையானது. ஏப்ரல் 9 அன்று ₹8,390க்கு உயர்ந்தது. இப்போது விலை மேலும் உயர்ந்து ₹8,660க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் பயணம் என்றுப் பார்த்தால் இது புதுசல்ல. 2000ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கம் ₹3,500 மட்டுமே. 2008 நிதி நெருக்கடிக்குப் பிறகு ₹10,000 ஆனது. கொரோனா காலத்தில் ₹38,000. இப்போது ரஷ்யா-உக்ரைன் போர், பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் ஆகியவற்றால் தங்கத்தின் விலை ₹67,000 முதல் ₹69,000 வரை எட்டியுள்ளது.
தங்கத்தின் மீது மக்களின் நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக தங்க கவுன்சில் கூறுவதப்படி, மத்திய வங்கிகள் மட்டும் உலகளவில் சுமார் 20% தங்கத்தை வாங்குகின்றன. தங்கம் வாங்கும் துறைகளில் மூன்றாவது இடத்தில் மத்திய வங்கிகள்தான் இருக்கின்றன.
பொருளாதார நிச்சயமற்ற சூழ்நிலை, பங்குச்சந்தை வீழ்ச்சி, பணவீக்கம், அரசியல் பதற்றம்—இவை அனைத்தும் கோல்டுக்கான DEMAND களை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன.இதனால் தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாக மக்கள் மத்தியில் அதிக நம்பிக்கையை பெற்றிருக்கிறது.
சொல்ல விரும்புவது என்னவென்றால், தங்கத்தின் விலை ஒரு சில நாட்களுக்கு குறைந்தாலும், நீண்ட காலத்தில் உயர்வதே உறுதி. அதனால், தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள், இதை ஒரு நல்ல வாய்ப்பாக கருதலாம்.