தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 580-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 640-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 245 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,825 ரூபாய்க்கும் சவரனுக்கு 1,960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து வருகிறது. இன்று கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 206 ரூபாய்க்கும் கிலோவுக்கு 9 ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 2 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
