நடனத்துக்கு நடுவே நடிப்பு என்னும் புதிய கலையைத் தொடங்கி
அதற்குப் பாப் என்று பெயரிட்டு உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்
ஆப்பிரிக்க- அமெரிக்கப் பாடகரான மைக்கேல் ஜாக்சன்.
உலகம் முழுவதும் பிரபலமானது இந்தப் பாப் நடனம்.
இதைப்போல ஆடுகளும் நடந்து சென்றவாறே தலையை
அசைத்துச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில்
பரவி வருகிறது.
பண்டிகை ஒன்றுக்குச் சென்று விற்பனை ஆகாத ஆடுகளை
அதன் உரிமையாளர்கள் இருவர் கொட்டிலுக்கு ஓட்டிக்கொண்டு
வருகின்றனர்.
உயிர் தப்பிவிட்ட பெரு மகிழ்ச்சியில் கம்பீரமாக நடைபோட்டு
பேரானந்தத்தில் பாப் ஆடி வருகிறதோ இந்த ஆடுகள்…?