Tuesday, January 27, 2026

60 வயதில் இளம்பெண்ணை திருமணம் செய்த ‘கில்லி’ அப்பா! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்…!

11 மொழிகளில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கும் ஆஷிஷ் வித்யார்த்தியை தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்தது என்னவோ ‘கில்லி’ அப்பாவாக தான்.

அது மட்டுமில்லாமல் ‘மாப்பிள்ளை’, ‘உத்தமபுத்திரன்’ மற்றும் ‘பாபா’ போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

60 வயதான ஆஷிஷ் வித்யார்த்தி ரூபாலி பருவா என்ற அசாமை சேர்ந்த இளம்பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். நடிகர், பாடகர் மற்றும் நாடக கலைஞரான ராஜோஷி பருவா இவரது முதல் மனைவி ஆவார்.

குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் ஆஷிஷ் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் வைரல் ஆன நிலையில் நெட்டிசன்கள் கலவையான விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். ஆஷிஷ் வித்யார்த்தி சிறந்த நடிப்பிற்காக 1995-ஆம் ஆண்டு துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News