சேமிப்பு திட்டங்களில் ஒன்றான தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டம் என்பது, இந்திய அரசு தபால் அலுவலகம் மூலம் வழங்கும் ஒரு சிறிய சேமிப்புத் திட்டம். பாதுகாப்பான முதலீடு மற்றும் வருமானம் பெற விரும்புவோருக்கு இது ஏற்ற திட்டமாக இருக்கும். இந்த அரசு ஆதரவு பெற்ற திட்டம் உறுதியான வருமானம், வரிச் சலுகைகள் மற்றும் நெகிழ்வுத் தன்மை கொண்டது.
NSC என்று சொல்லப்படும் இந்த முதலீடுகள் மூலம் 5 ஆண்டுகளில் நீங்கள் ரூ.5 லட்சம் வரை பெறலாம். இந்தத் திட்டத்தில், ஒருவர் ரூ.1,000 கூட முதலீடு செய்யத் தொடங்கலாம். இதற்கு லிமிட் கிடையாது. அரசாங்கம் உங்கள் பணத்திற்கு உத்தரவாதமாக இருக்கிறது. எனவே இதில் எந்த ஆபத்தும் இல்லை.
இத்திட்டத்தில் ஆண்டுதோறும் கூட்டுத் தொகையுடன், வருடத்துக்கு 7.7% வட்டி கொடுக்கப்படும். மேலும், அரசாங்கம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் வட்டி விகிதத்தை பரிசீலிக்கிறது. அதனால் இது எதிர்காலத்தில் மாறலாம். மேலும் உங்கள் பணம் 5 ஆண்டுகளுக்கு Log-in செய்யப்படுகிறது. நீங்கள் அதை முன்கூட்டியே எடுத்துவிட்டால், உங்களுக்கு எந்த வட்டியும் கிடைக்காது.
முதலீடு செய்த தொகை மட்டுமே உங்களுக்கு திரும்ப கிடைக்கும். முழு பலனைப் பெற, முதலீடு செய்த பணத்தை முழு Log-in காலமான 5 வருடங்களுக்கு வைத்திருக்க வேண்டும். மேலும் வருமான வரிச் சட்ட பிரிவு 80C இன் கீழ், ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு கோரலாம்.
உதாரணமாக தற்போதைய வட்டி விகிதமான 7.7% இல் ஒருவர் இந்தத் திட்டத்தில் 11 லட்சம் முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஆரம்ப முதலீடான 11 லட்சத்துடன் வட்டியாக பெறப்பட்டது 4 லட்சத்து 93 ஆயிரத்து 937. அதாவது கூட்டுத் தொகையுடன் கணக்கிட்டால். மற்றும் முதிர்ச்சியில் பெறப்பட்ட தொகை ரூ.15 லட்சத்து 93 ஆயிரத்து 937. அப்படியென்றால் 5 ஆண்டுகளில் நீங்கள் ரூ.5 லட்சம் சம்பாதிக்க முடியும்.
இத்திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்துக்கு சென்று NSC விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.