Monday, January 26, 2026

தமிழ்நாட்டில் வசூல் சாதனை படைத்த ‘குட் பேட் அக்லி’

இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியானது. இப்படத்தில் த்ரிஷா, சிம்ரன், பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படம் வெளியான முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் செய்து வருகிறது.

இந்நிலையில், இத்திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் தமிழ் நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலை கடந்துள்ளது. உலகளவில் திரைப்படம் 200 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

Related News

Latest News