இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியானது. இப்படத்தில் த்ரிஷா, சிம்ரன், பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இப்படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படம் வெளியான முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் செய்து வருகிறது. படம் வெளியாகி 4 நாட்கள் ஆன நிலையில் தற்போது வரை ரூ.150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
‘குட் பேட் அக்லி’ திரைப்படம் அஜித்தின் முந்தைய படங்களின் வசூலை முறியடித்து முதல் இடத்தை பிடிக்கும் என வர்த்தக நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.