Wednesday, December 24, 2025

‘பூண்டு டீ’ யின் கோடி நன்மைகள்!! யாரெல்லாம் குடிக்கலாம்?

பூண்டு நாம் சமைக்கும் உணவில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருள். ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட பூண்டு பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகின்றது.

இந்த பூண்டில் வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம்,சல்ஃபேட் , மெக்னீசியம், இரும்புச் சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இப்படி பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் பூண்டில் தேநீர் தயாரித்தும் குடிக்கலாம் தெரியுமா?

இந்த தேநீரை தினமும் ஒரு கிளாஸ் குடித்து வந்தால் உடலில் பல நன்மைகள் கிடைக்கும் என்பதும் உங்களுக்கு தெரியுமா? இந்த நன்மைகள் பற்றி தற்போது பார்க்கலாம்..

பூண்டு – 5 பற்கள்,தேன் – 2 ஸ்பூன் , எலுமிச்சை சாறு – 1/2 கப், தண்ணீர் – 3 கப் எடுக்கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீரை ஊற்றி நறுக்கிய பூண்டு பற்களை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து கொள்ளவும். பிறகு ஓரளவு சூடு ஆறியதும் அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும். அவ்வளவுதான் பூண்டு டீ ரெடி…

தற்போது பூண்டு டீ யின் நன்மைகளை பார்க்கலாம்..

*உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு பூண்டு டீ பெரிதும் உதவும்.

*சளி, இருமல், தொண்டைக்கட்டு, தொண்டைப்புண், காய்ச்சல் மற்றும் சைனஸ் தொற்று ஆகிய பிரச்சினைகள் உள்ளவர்கள் பூண்டி டீ குடிக்கலாம்.

*இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் பூண்டு டீ குடித்து வந்தால், உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.

*பூண்டில் இருக்கும் அல்லிசின் மற்றும் செலினிகயம் என்னும் பண்புகள் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வழிவகுக்கும்.

*காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பல வகையான புற்றுநோயின் தாக்கத்தை தடுக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  • இளம் வயதிலேயே சருமம் சுருக்கம் ஏற்படுவதை தடுக்க தினமும் பூண்டு டீ குடிக்கலாம்.

*பூண்டில் ஆன்டி பாக்டரியல், பூஞ்சை எதிர்ப்பு போன்ற பண்புகள் உள்ளதால், நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த வழிவகுக்கிறது.

பூண்டு டீ ஆரோக்கியமானது என்றாலும், உங்கள் உணவு முறையில் ஏதேனும் மாற்றம் செய்ய நினைத்தால் மருத்துவரிடம் ஒரு முறை ஆலோசனை செய்த பிறகு மாற்றுவது சிறந்தது.

Related News

Latest News