Tuesday, January 21, 2025

ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டை நடத்தும் ஷங்கரின் கேம் சேஞ்சர்..!!

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கேம் சேஞ்சர். இப்படத்தில் கியாரா அத்வானி, சுனில், அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளது. இதற்காக ரூ.75 கோடி வரை செலவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், கேம் சேஞ்சர் திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 7 கோடி வரை வசூல் செய்துள்ளது.

Latest news