பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் அன்புமணியை கட்சி பதவியில் இருந்து டாக்டர் ராமதாஸ் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் தமிழ்குமரனுக்கு பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பை டாக்டர் ராமதாஸ் தற்போது வழங்கி உள்ளார். தமிழ்குமரன் பாமக கவுரவ தலைவர் ஜி.கே. மணியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.