Wednesday, January 14, 2026

இன்று முதல் RailOne செயலியில் டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3% கட்டண சலுகை..!

ரெயில் ஒன் (Rail One) செயலி மூலம் முன்பதிவில்லாத சாதாரண ரயில் டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு 3 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்டர்களில் கூட்டத்தில் நின்று டிக்கெட் எடுப்பதைத் தவிர்த்து, செல்போன் செயலி மூலம் டிக்கெட் வாங்குவதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த சலுகை வழங்கப்படுகிறது.

இதற்கு முன்பு இந்த 3% கட்டண சலுகை QR கோடு மூலம் கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, ரெயில் ஒன் செயலி மூலம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி முன்பதிவில்லாத டிக்கெட் எடுக்கும் அனைத்து பயணிகளுக்கும் இந்த சலுகை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஆர்-வாலட் (R-Wallet) மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3% தொகை திரும்ப பெறும் (cashback) நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. இந்த சலுகை இன்று (புதன்கிழமை) முதல் ஜூலை 14-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

Related News

Latest News