Saturday, December 27, 2025

இனிமேல் தற்காலிக கொடிக்கம்பங்கள் நட அனுமதி அவசியம்!!

தமிழகத்தில் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்களை 2025 ஏப்ரல் 28க்குள் அகற்ற வேண்டும் என்று 2025 ஜனவரியில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கு குழுக்கள் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்காக கொடிக்கம்பங்கள் அமைக்கும் போது, சாலையில் தார்கள் மீதும், சாலை நடுவில் உள்ள செண்டர் மீடியன் பகுதிகளில் கொடிக்கம்பங்கள் அமைக்க கூடாது.

மூன்று நாட்களுக்கு மேல் கொடிக்கம்பங்களை வைத்திருக்க கூடாது என உள்ளிட்ட வழிகாட்டு விதிமுறைகளும் வகுக்கப்பட்டன. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக கொடிக்கம்பங்கள் அமைக்க அனுமதி கட்டாயம் பெற வேண்டும் என்றும், அரசியல் கட்சிகளின் பிரசாரத்தின்போது தற்காலிக கொடிகள் கட்ட அனுமதி பெற வேண்டும் என்றும், தேர்தல் பிரசாரம், தர்ணா, பண்டிகை போன்ற நிகழ்வுக்கு கொடிக்கம்பம், பேனர் வைக்க அனுமதி கட்டாயம் பெற வேண்டும் எனவும், மேலும், அனுமதியின்றி நடப்படும் தற்காலிக கொடிக்கம்பம் எந்த முன்னறிவிப்பின்றி அகற்றப்படும் என்றும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related News

Latest News