Friday, October 3, 2025

இனிமேல் 1 மணி நேரம் தான்.. நாளை முதல் புதிய நடைமுறை.. RBI அதிரடி!!

வங்கியில் காசோலை டிபாசிட் செய்த சில மணி நேரத்தில், உரியவரின் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதற்கான புதிய நடைமுறை, நாளை அதாவது, அக்., 4ம் தேதி அமலுக்கு வருவதாக RBI அறிவித்துள்ளது.

இதனால், தற்போது காசோலை பரிவர்த்தனைக்கு, இரண்டு நாட்கள் வரை ஆகும் நிலையில், இனி, சில மணி நேரத்தில் பணம் வரவு வைக்கப்படும்.

இது குறித்து RBI அறிவிப்பில்; தற்போது CDS எனப்படும் காசோலைக்கு ஒப்புதல் அளிக்கும் முறையில், பேட்ஜ் அடிப்படையில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இனி, அவை தொடர்ச்சியான, உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

காசோலை அடிப்படையிலான பரிவர்த்தனையை மேம்படுத்துவதுடன், தேவையற்ற தாமதத்தை குறைத்து, வாடிக்கையாளர் சேவையை துரிதப்படுத்தும் நடவடிக்கையாக புதிய நடைமுறை, வரும் அக்., 4ம் தேதி மற்றும் 2026 ஜன., 3ம் தேதி என இரண்டு கட்டமாக அமலுக்கு வருகிறது என்று அறிவித்துள்ளது .

உதாரணமாக, காலை 10 மணி முதல் 11 மணி வரை பெறப்படும் காசோலையை, பிற்பகல் 2 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும். உறுதி செய்யப்படாவிட்டால், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் தன்னிச்சையாக ஒப்புதல் அளிக்கப்பட்டு, பணம் வரவு வைக்கப்படும். பரிவர்த்தனை முடிந்த பின்னர், காசோலை பெற்று கொண்ட வங்கி, வாடிக்கையாளர் கணக்கில், ஒரு மணிநேரத்திற்குள் பணத்தை வரவு வைக்க வேண்டும்.

1980-ம் ஆண்டுகளில் வங்கிகளில் காசோலையை செலுத்தினால் அதை பரிசீலிக்க குறைந்தபட்சம் ஒரு வாரகாலம் ஆகும். அதன் பின்பு அது 3 நாட்களாக குறைந்தது. 2008-ம் ஆண்டு முதல் 1 நாளாக குறைந்தது. தற்போது அது 1 நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலும் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால் பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு உடனடியாக பணம் வரவுவைக்கப்படும். நாட்டின் பொருளாதாரமும் வேகமாக வளர்ச்சி அடையும் என்று ரிசர்வ் வங்கி தரப்பில் சொல்லப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News