ஐபோன் 18 முதல் Foldable வரை! ஆப்பிள் அதிரடி! 2026-ல் மட்டும் 20 புதிய தயாரிப்புகள்!

2026 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் தொழில்நுட்ப உலகில் ஒரு மிகப்பெரிய புயலைக் கிளப்பத் தயாராகிவிட்டது. வழக்கமாக ஒன்றிரண்டு போன்களை வெளியிடும் ஆப்பிள், இந்த வருடம் மட்டும் சுமார் 20 புதிய தயாரிப்புகளைக் களமிறக்கப் போகிறது என்ற அதிரடி தகவல் வெளியாகியுள்ளது!

முதலில் நடுத்தர மக்களையும் கவரும் வகையில், குறைந்த விலையில் ‘ஐபோன் 17e’ (iPhone 17e) மாடல் வெளியாகவுள்ளது. விலை குறைவுதான், ஆனால் இதில் டைனமிக் ஐலேண்ட், மேக்சேஃப் சார்ஜிங் மற்றும் சக்திவாய்ந்த A19 சிப் என பிரீமியம் வசதிகள் அனைத்தும் இருக்கும்.

அடுத்ததாக ஐபேட் வரிசை! M4 சிப் பொருத்தப்பட்ட புதிய ஐபேட் ஏர் (iPad Air) மற்றும் தினசரி பயன்பாட்டிற்கான அப்கிரேட் செய்யப்பட்ட சாதாரண ஐபேட் மாடல்களும் வரவுள்ளன.

கம்ப்யூட்டர் பிரியர்களுக்கு ஒரு விருந்து காத்திருக்கிறது. ஆப்பிளின் அதிவேகமான M5 சிப் உடன் புதிய மேக்புக் ஏர் மற்றும் ப்ரோ மாடல்கள் அறிமுகமாகின்றன. இது மட்டுமல்லாமல், நீண்ட நாட்களாக அப்டேட் ஆகாமல் இருந்த மேக் ஸ்டுடியோ (Mac Studio) மற்றும் ஸ்டுடியோ டிஸ்ப்ளேவும் புதுப்பொலிவுடன் வரப்போகிறது.

வீட்டை ஸ்மார்ட்டாக மாற்ற நினைப்பவர்களுக்கு, சிரி (Siri) வசதியுடன் கூடிய புதிய ‘ஸ்மார்ட் ஹோம் ஹப்’ மற்றும் ஆப்பிளின் சொந்த தயாரிப்பான ‘செக்யூரிட்டி கேமரா’ (HomeKit Camera) ஒன்றையும் ஆப்பிள் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

ஆனால், எல்லோரும் ஆவலோடு எதிர்பார்ப்பது ஆண்டின் இறுதியில் வரப்போகும் அந்த மெகா ரிலீஸ்தான்! ஆம், சக்திவாய்ந்த A20 Pro சிப் உடன் ‘ஐபோன் 18 ப்ரோ’ மற்றும் ’18 ப்ரோ மேக்ஸ்’ மாடல்கள் வெளியாகவுள்ளன. கூடவே, சாம்சங் போன்களுக்குப் போட்டியாக ஆப்பிளின் முதல் ‘மடிக்கும் ஐபோன்’ (Foldable iPhone) இந்த ஆண்டு அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மொத்தத்தில் 2026-ல் ஆப்பிள் தனது எல்லா ஆயுதங்களையும் இறக்கப்போகிறது. புது போன் வாங்க பிளான் பண்றவங்க கொஞ்சம் வெயிட் பண்ணி வாங்குறது நல்லது!

Related News

Latest News