தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக 3 கட்டங்களாக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில் 297 வாக்குறுதிகள் வெளியிட்டுள்ளது.
முக்கிய அறிவிப்புகள் சில;
ஆட்சிக்கு வந்ததும் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ.10 ஆயிரம்.
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.2 ஆயிரம்.
ஆண்களுக்கும் நகர பேருந்துகளில் இலவச பயணம்.
வருடத்திற்கு 3 இலவச சிலிண்டர்கள்.
5 லட்சம் பேருக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ. 25 ஆயிரம் மானியம்.
குடும்பத் தலைவிகளுக்கு குளிர்சாதனப் பெட்டி.
வீடு இல்லாத அனைத்துக் குடும்பங்களுக்கும் தரமான வீடு.
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பருப்பு, 1 லிட்டர் எண்ணெய்.
நெல்லுக்கு ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.3500ஆக உயர்த்தப்படும்.
அரசுப்பள்ளி மாணாக்கருக்கு மருத்துவ படிப்பு இடஒதுக்கீடு 10% ஆக உயர்த்தப்படும்.
கரும்புக்கான ஆதார விலை டன்னுக்கு ரூ.4500ஆக உயர்த்தப்படும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணாக்கருக்கு இலவச லேப்டாப்.
சர்வதேச தரத்தில் தமிழ்நாட்டில் 10 பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும்.
நவீன வசதிகளுடன் 2000 அம்மா மினி கிளினிக்குகள் மீண்டும் திறக்கப்படும்.
முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை (IVF).
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் வைப்பு நிதி ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும்.
