கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை நந்தனத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வருகிற 19-ந்தேதி விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதிக்குள் 10 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
