Saturday, December 27, 2025

ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம்? அமைச்சர் சிவசங்கர் பதில்

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இலவச பேருந்து பயண திட்டமான விடியல் பயணம் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் தினமும் சராசரியாக 57.81 லட்சம் பெண்கள் பயன் அடைந்து வருகிறார்கள். இந்த திட்டம் தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மற்ற மாநிலங்களிலும் இந்த திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் பேது பேசிய திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், ஆண்களுக்கும் விடியல் பயணம் அளிக்கபடுமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் குறித்த ஆர்வம் வரவேற்கத்தக்கது. பெண்கள் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். இதனால் பெரியார் கொள்கைகளின் பெண்களை மேம்படுத்த இலவச பயணம் வழங்கப்படுகிறது. அரசின் நிதிநிலை சீராகும் பொழுது ஆண்களுக்கும் விடியல் பயணம் வழங்க பரிசீலிக்கப்படும் என்று பதில் அளித்தார்.

Related News

Latest News