முகேஷ் அம்பானியின் Jio நிறுவனம் எந்த அதிர்வும் இல்லாமல் மறுபடியும் இலவச டேட்டா சலுகையை கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த முறை AI Cloud Storage டேட்டாவை இலவசமாக களமிறக்கி கவனத்தை ஈர்த்துள்ளது. இது Jio Prepaid திட்டங்களுக்கு மட்டுமல்லாமல், போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கும் கொடுக்கப்படுகிறது. இந்த இலவச டேட்டாவை பெறுவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ப்ரீபெய்ட் திட்டங்களை பொறுத்தவரை ரூ.299 அல்லது அதற்கு மேல் விலை கொண்ட திட்டங்களில் Jio AI Cloud Storage கிடைக்கிறது. இந்த ஸ்டோரேஜ் மூலம் AI Scanner, AI Memories மற்றும் Digi Locker ஆகியவற்றை பயன்படுத்திக்கொள்ள முடியும். இது ஒவ்வொரு ரீசார்ஜ் மூலமும் கிடைப்பதால், கஸ்டமர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
போஸ்ட்பெய்ட் திட்டங்களில் அனைத்து Family மற்றும் தனிப்பட்ட திட்டங்களிலும் இது கொடுக்கப்படுகிறது. ஆகவே, ஜியோ ரூ 349, ரூ 449, ரூ 649, ரூ 749 மற்றும் ரூ 1549 போஸ்ட்பெய்ட் திட்டம் ஆகியவற்றில் 50 ஜிபிக்கான ஜியோ ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. ஆகவே, ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் அதற்கு பிறகு 64 kbps போஸ்ட் டேட்டா சலுகைகளை 28 நாட்கள் வேலிடிட்டியில் பயன்படுத்தி கொள்ள முடியும்.
மேலும் நாளொன்றுக்கு 100 SMS-சோடு இந்த டேட்டா, வாய்ஸ் மற்றும் SMS சலுகைகள் போக Jio Hotstar Mobile சந்தாவை கொடுக்கிறது. ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவானது 28 நாட்களுக்கு மட்டுமல்லாமல் 90 நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
ஆனால் 28 நாட்களுக்கு பிறகு அடுத்த ரீசார்ஜ் செய்தால் மட்டுமே ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா தொடர்ந்து கிடைக்கும். அதுவும் 48 மணி நேரத்துக்குள் ரீசார்ஜ் செய்யாவிட்டால் ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவை தொடர்ந்து பயன்படுத்த முடியாது. இந்த சலுகைகள் மட்டுமல்லாமல் இப்போது கூடுதலாகவும், இலவசமாகவும் ஜியோ ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் கிடைப்பதால் இது மக்களை கவரும் திட்டமாகவே இருக்கும்.