விழுப்புரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது

விழுப்புரத்தில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல் பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகில், போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில், தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீசார், சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த நான்கு இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அவர்களது பையில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து சௌந்தரராஜன், சஞ்சய், பிரசன்ன ராஜ் மற்றும் மனோகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Related News

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Latest News