சென்னை பூந்தமல்லி அரசு மருத்துவமனை அருகே போலீசார், சந்தேகத்திற்கிடமாக சென்ற காரை மடக்கி சோதனை செய்தபோது காரில் இருந்தவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தபோது, காரில் தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர்குமார், சரவணன்சிங், கோதாசிங், ராமாராம் என்பதும் இவர்கள் பெங்களூரில் இருந்து காரில் குட்காவை காரில் கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.
இவர்களிடமிருந்து 200 கிலோ குட்கா மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.