முன்னாள் மத்திய ரெயில்வே அமைச்சர் மற்றும் 2 முறை மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்தவரான முகுல் ராய், கடந்த 2 ஆண்டுகளாக உடல்நல குறைவால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு ஞாபக மறதி நோயும் இருந்துள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சால்ட் லேக் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை 1.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார். இதனை அவருடைய மகன் சுப்ரான்ஷு ராய் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தி உள்ளார். அவருடைய மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
