பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கபிந்திர புர்கயஸ்தா வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது தனது 94
இவர், வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர். சில்சார் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
