மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சிவராஜ் பாட்டீல் (வயது 90). இவர் 2004 முதல் 2008 வரையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய உள்துறை அமைச்சராக செயல்பட்டுள்ளார்.
1991 முதல் 1996 வரை நாடாளுமன்ற மக்களவை சபாநாயகராகவும், 2010 முதல் 2015வரை பஞ்சாப் மாநில ஆளுநராகவும் செயல்பட்டுள்ளார்.
இந்நிலையில், வயது முதிர்வு, உடல் நலக்குறைவு காரணமாக சிவராஜ் பாட்டீல் இன்று காலமானார். அவரது மறைவிற்கு குடியரசு தலைவர், பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
