தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :
மத்திய இணை அமைச்சர் பதவி வரும்போது பெற்றுக்கொள்வேன். நான் கூண்டுக் கிழியாக இருக்க விரும்பவில்லை. உலகம் முழுவதும் சுற்றுவதற்கு இது ஒரு வாய்ப்பு. கட்சி பணிகளை அவ்வப்போது செய்கிறேன். ஆடு, மாடுகளோடு இருக்கிறேன். விவசாயம் பாக்குறேன்.
என்னுடைய பணியை சந்தோஷமாக செய்கிறேன். புத்தகங்கள் படிக்க நிறைய நேரம் கிடைக்கிறது. குழந்தைகளோடு நேரத்தை செலவிடுகிறேன். இதிலேயே பயணிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஒரு தொண்டனாக பிரதமர் மோடிக்கு பணி செய்ய விரும்புகிறேன். என்னுடைய ஆசை பெரியது.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கான காலம் வரும் என அவர் கூறியுள்ளார்.