கடந்தாண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதையடுத்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. மேலும், அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
இதையடுத்து வங்கதேசத்தில் புதிய அரசு அமைந்த உடன் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை, ஊழல் செய்தது உட்பட ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கில் இன்று (நவம்பர் 17) டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது. போராட்டங்களின் போது 1,500க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் கொடூர வன்முறைக்கு ஷேக் ஹசீனாவே பொறுப்பு என தீர்ப்பாயம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அவருக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
