அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தான் விலகுவதாக முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் அறிவித்துள்ளார்.
கடந்த 2006 முதல் 2011 வரை புதுவை நகராட்சி கோலாஸ் நகர் வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்தார். 2011, 2016-ம் ஆண்டுகளில் புதுவை முதலியார்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் முதலியார்பேட்டை தொகுதியில் 3-வது முறையாக அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பாஸ்கர் தோல்வியடைந்தார்.
இந்நிலையில் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். பதவி விலகிய பாஸ்கர் மாற்று கட்சிக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
