Friday, December 27, 2024

பைக் ஸ்டார்ட் பண்ண முடியாமல் திணறிய தோனி! வைரலாகும் வீடியோ

நாடு முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ள நட்சத்திர வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான தோனி, கார் மற்றும் பைக் பிரியர் என்பது அனைவரும் அறிந்ததே.

பல பிரபல பைக் மாடல்களையும் வின்டேஜ் classic கார்களையும் தன்வசம் வைத்துள்ளார் தோனி. பைக் பிரியர்களின் அபிமான பைக்கான Yamaha RD350 ரகத்தில் இரண்டு பைக்குகள் தோனியிடம் உள்ளது.

இந்நிலையில், தோனி திடீரென நின்று போன தனது Yamaha RD350 பைக்கை ஸ்டார்ட் செய்ய திணறும் காட்சிகளை, அவரை காண  ராஞ்சி இல்லத்தின் முன் காத்திருந்த Youtuber ஒருவர் படமாக்கி உள்ளார்.

முன்னதாக பென்ஸ் காரில், தோனியின் மனைவி சாக்ஷி வீட்டிற்குள் செல்ல, பின்னால் தோனி தனது பைக்கில் வரும் போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிறிது நேர போராட்டத்தில் பைக்கும் ஸ்டார்ட் ஆகி விடுவதையும் காண முடிகிறது. வீடியோ எடுப்பதை, அங்கிருந்த காவலாளிகள் தடுக்க முற்பட்டாலும், இந்த வீடியோ Youtubeஇல் பகிரப்பட்டதால் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Latest news