மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவ், பாஜகவில் இணைந்துள்ளார்.
39 வயதான இவர் கடந்தாண்டு ஆண்டு ஜூன் மாதம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் கேதர் ஜாதவ் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் மும்பையில் மகாராஷ்டிர அமைச்சரும் மாநில பாஜக தலைவருமான சந்திரசேகர் பவன்குலே முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜக உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.