திருச்சிராப்பள்ளி மாநகராட்சி முன்னாள் மேயரும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 31 வது வார்டு காங்கிரஸ் கட்சியின் மாமன்ற உறுப்பினருமான சுஜாதா உடல் நலக்குறைவால் காலமானார்.
இருதய கோளாறு காரணமாக திருச்சி புத்தூர் அருகே உள்ள சுந்தரம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறப்புக்கு திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சுஜாதா மறைவுக்கு காங்கிரஸ் பிரபலங்கள் மற்றும் தி.மு.க, வி.சி.க உள்ளிட்ட காங்கிரஸ் கூட்டணி கட்சி பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.