முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் : முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் திமுகவினர், கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். மேலும் திமுகவினர் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின், சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Related News

Latest News