திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்ன காளிபாளையம் பகுதியில், 45 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்த குப்பை கொட்டும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, நேற்று (டிச.17) பொதுமக்கள் கால்நடைகளுடன் குப்பை லாரிகளை மறித்து சிறைபிடித்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்றைய திருப்பூர் குமரன் சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர்
இதற்கு போலீசார் அனுமதி அளிக்காத நிலையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து பாஜக கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர் இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
