திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன்!

அதிமுக சார்பில் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த மைத்ரேயன், அக்கட்சியின் அமைப்புச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

கடந்த மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும் என மைத்ரேயன் எதிர்பார்த்த நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்காததால் அதிருப்தியில் இருந்தார்.

இந்நிலையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் திமுகவில் இணைந்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக, அதிமுகவின் முன்னாள் எம்பி அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

Related News

Latest News