Wednesday, December 24, 2025

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு : அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கட்சியிலிருந்து நீக்கம்

பாஜக நடத்தி வரும் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்ட அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ விஜயகுமார் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் : , கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திரு. K.S. விஜயகுமார் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.

Related News

Latest News