முன்னாள் அமைச்சரும் கோபிச்செட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன், நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். தலைமை செயலகம் சென்ற அவர் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
செங்கோட்டையன் தவெக- வில் இணையப்போவதாக செய்திகள் பரவி வந்த நிலையில் நேற்று மாலை, சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் உள்ள த.வெ.க. தலைவர் விஜயின் வீட்டுக்கு வருகை தந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் இன்று காலை சென்னையில் பனையூருக்கு சென்ற செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். செங்கோட்டையனுக்கு வழங்கப்படும் பதவி விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
