கோவையில் அ.தி.மு.க முன்னாள் மாவட்ட கவுன்சிலரின் மனைவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கார் ஓட்டுநர் சரணடைந்தார்.
கோவை தாளியூரில் வசித்து வருபவர் கவி சரவணக்குமார். பன்னீர்மடை ஊராட்சி முன்னாள் தலைவரும், அ.தி.மு.க முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான இவருக்கு, மகேஸ்வரி என்பவருடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், தம்பதியின் வீட்டில் சுரேஷ் என்பவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில், அவர் வீட்டில் தனியாக இருந்த மகேஸ்வரியை கத்தியால் குத்திக் கொன்று விட்டு காவல்நிலையத்தில் சரணடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வட வள்ளி காவல் நிலையத்தில் சுரேஷ் சரணடைந்திருக்கும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
